Posts

Showing posts from March, 2011

வாழூரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா

   முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன்.  அன்புடையீர் !          அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) வாழும்ஊரில் (வாழூரில்) பெருமானாரின் மீலாதுப் பெருவிழா (20-03-2011) ஞாயிற்றுக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில் 7-00 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னிலை -   வாழூர் ஜமாஅத்தார்கள் தலைமை -     அல்ஹாஜ் இ.காதர் அவர்கள்              தலைவர் - முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ( வாழூர் ) கிராஅத்       மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்              பசீர் அஹ்மது ஆலிம் ஜைய்னி ஹஜ்ரத் அவர்கள்              இமாம் - மேலப் பள்ளிவாசல் , தேவிபட்டிணம் . இஸ்லாமியகீதம்-   மௌலானா  மௌலவி முஹம்மது இப்றாகீம்  ஆலிம் மழாஹி...

பெருமானாரின் மீலாதுப் பெருவிழாக்கள் !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அழகங்குளம் முஸ்லீம் பொது ஜன சங்கம் சார்பில் உத்தம திருநபியின் உதய தின விழா 20-2-2011- ஞாயிற்றுக் கிழமை (திங்கள் இரவு) நேரம் இரவு 10-00- மணியளவில், அழகங்குளம் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.  சமநிலைச் சமுதாயம் தமிழ் மாத இதழின் ஆசிரியர், சென்னை மௌலானா மௌலவி S-N- ஜாஃப்பர் சாதிக் ஃபாஜில் பாகவி M.A.,M.phil ஹஜ்ரத் அவர்கள்.மற்றும் நாகை மாவட்டம் , புரவாச்சேரி ஜனாப் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சுபுரிஷா ஃபைஜி ஹஜ்ரத் கிப்லா அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். துபையில் மீலாதுப் பெருவிழா (20-02-2011) அன்று சிறப்புர நடைபெற்றது. காயல் பட்டிணம்  ஜும்ஆப் பள்ளி கதீப் மௌலானா மௌலவி  ஹாஃபிழ் அப்துல் காதிர்  ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். குவைத்தில் மீலாது பெருவிழா 18-02-2011 அன்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.  நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அபுதாபியில்...

சித்தார் கோட்டையில் மீலாது பெருவிழா

          அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் திருப்பெயரால்           சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த             உத்தம திருநபியின் உதய தின விழா அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரபீஉ லவ்வல் பிறை 29-ல்  (05-03-2011) சனிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம்-     முஹமதிய பள்ளிகளின் மைதானம். தலைமை- அ. ஷாஹுல் ஹமீது கனி அவர்கள்.           (தலைவர்,முஸ்லிம் தர்ம பரிபாலன சபா) முன்னிலை- சித்தார் கோட்டை ஜமாஅத்தார்கள். கிராஅத்-  மௌலானா ஜமால் முஹம்மது ஆலிம் ஃபைஜி அவர்கள். வரவேற்புரை- செயலர் அவர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா துவக்கஉரை- ஹாஜி அஹமது கபீர்  அவர்கள் சிறப்புரை- பெருங்கவிக்கோ வா.மு.சேதுஇராமன் அவர்கள்.           (முன்னால் தமிழாசிரியர் செய்யது அம்மாள் பள்ளி  ராம்நாட்) பேருரை- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்          மு.ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி அவர்க...

தமிழக அரசின் மீலாது நபி அறிவிப்புகள்!!!

மீலாது நபி விழாவிற்கு1969- ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறையை வழங்கியவர் கலைஞர். பிப்-15- மீலாது நபித்திரு நாளை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். அற நெறிகளைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக்கருதி மீலாது நபித் திரு நாளுக்கு 1969- ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணையிட்டு நடைமுறைப் படுத்தியதை நான் நினைவு கூர்கிறேன். அ.தி.மு.க அரசு மீலாது நபித் திருநாள் விடுமுறையை இரத்து செய்தது. 2001-ல் ஏற்பட்ட அ.தி.மு.க, அரசு மீலாது நபித் திருநாள் விடுமுறையை இரத்து செய்ததையும், 2006-ல் இந்த அரசு மீண்டும் அமைந்தபோது, மீலாது நபித் திரு நாளுக்கு மறுபடியும் தி.மு.க அரசு விடுமுறை வழங்கி, இஸ்லாம் சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாக திகழ்வதையும் சுட்டிக்காட்டி, மீலாது நபி திருநாள் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். சென்னையில் முஸ்லிம்கள் அடக்கத்தலத்துக்கு (கபர்ஸ்...

இராமநாதபுர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!!!

         பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப்  பெருமக்களுக்கு நலத்திட்ட  உதவிகள் ராமநாதபுரம்,பிப்,19;  -ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப் பெருமக்கள் மற்றும் பணியாளர்கள் (மோதினார்கள்) நலத்திட்ட உதவிகள் பெறலாம் என கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ; இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப்பெருமக்கள், பணியாளர்களுக்கு (மோதினார்களுக்கு)  நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விபத்து மரணத்திற்கு ரூ ஒரு லட்சம், விபத்தில் ஊன முற்றோருக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும், இயற்கை மரணத்திற்கு 15- ஆயிரமும், ஈமச்சடங்கு செலவிற்கு 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையாக 10-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆயிரம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் பெண் குழந்தைகளுக்கும், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் இவ்வாரிய உறுப்பினர்களின் முதல் இரண்டு வாரிசுகளுக்கு கல்வித்தகுதிக்கேற்ப ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலும் வழங்கப...

தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியின் அறிவிப்பு!!!

  ஷரீஅத் அறிவிப்பு. அன்புடையீர்!                 அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்) ஹிஜ்ரி 1432- ஸஃபர் பிறை 29, (04-02-2011) ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை ரபீஉ லவ்வல் பிறை தென்பட்டதினால் ஆங்கில மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.  எனவே  எதிர் வரும் (16-02-2011) ஆம் தேதி புதன் கிழமை அன்று மீலாதுந் நபி விழா கொண்டாடப்படும் என்பதை, கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜி மௌலானா மௌலவி அல்ஹாஜ் V.V.A. ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள் 05-20-2011 -அன்று தெரிவித்தார்கள். வஸ்ஸலாம்... வெளியீடு- மன்பஈ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.

பிச்சா வலசையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

               இராமநாதபுர மாவட்டம், திருப்புல்லாணி யூனியன்      பிச்சா வலசையில் மஸ்ஜிதுல் இஜாபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா      25-02-2011- வெள்ளிக்கிழமை காலை 10-00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம் -        மஸ்ஜிதுல் இஜாபா வளாகம் முன்னிலை –  முஸ்லிம் ஜமாஅத்தார்கள்  (பிச்சா வலசை) கிராஅத் –     மௌலவி M. அப்துல் முஜீப் பாகவி ஹள்ரத் அவர்கள் துவக்கவுரை -  மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ்              Z. தமீமுல் அன்ஸாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்              முதல்வர்; ஜமாலி ஹிப்ளு மதரஸா              வலங்கைமான், திருவாரூர் மாவட்டம். சிறப்புரை -     மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ்,          ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு