Posts

Showing posts from March, 2018

சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது மஜ்லிஸ் !!!

Image
                                                                           அன்புடையீர் !! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார் கோட்டையில் குத்புல் ஹிந் ஹஸனுஸ்  ஸன்ஜரி அஜ்மீர் ஹாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி  ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மௌலிது  மஜ்லிஸ் வலமை போல் மிகச்சிறப்பாக  24-03-2018 அன்று நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் இராமநாதபுரம், மற்றும் சுற்றுவட்டார உலமாப்பெருமக்களும், ஏராளமான ஸாலிஹீன்களும் கலந்து கொண்டு  அல்லாஹ்வின் அன்பையும் அருளையும்  பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சியின்  ஏற்பாடுகளை சித்தார் கோட்டை அஹ்லுஸ்  சுன்னத் வல் ஜமாஅத்தினர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.வஸ்ஸலாம்.

சித்தார் கோட்டையில் மீலாதுப் பெருவிழா வலமைபோல் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
அன்புடையீர் !! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார் கோட்டையில் மீலாதுப் பெருவிழா  19-03-2018 அன்று வலமைபோல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். மதரஸா மாணவர்கள் மழை பைத்து  மற்றும் யாநபி பைத்து ஓதியபோது இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  சுற்றுவட்டார உலமாப்பெருமக்களும்,ஏராளமான  ஸாலிஹீன்களும்  கலந்து கொண்டு  அல்லாஹ்வின் அன்பையும்  அருளையும் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் மிகச்சிறப்பாக  ஏற்பாடு செய்திருந்தார்கள்.வஸ்ஸலாம்.

சித்தார் கோட்டையில் மாபெரும் மீலாதுப் பெருவிழா !!!

Image
வெளியீடு  ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளையினர்.

கலீஃபத்துல் காதிரிய்யா மௌலானா அல்லாமா முஹம்மது அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானி பாகவி ஹழ்ரத் மறைவு !!!

Image
காயல்பட்டினம் மஹ்ளறா அரபுக் கல்லூரயின் 35 ஆண்டு  காலப் பேராசிரியர்' தமிழ் மாநில சுன்னத்வல் ஜமாஅத் மஜ்லிசுல் உலமாவின் 35 ஆண்டு காலத் தலைவர் ' எங்கள் கல்வி ஆஸான் 'கலீஃபத்துல் காதிரிய்யா மௌலானா மௌலவி அல்லாமா அஷ்ஷைக் முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானி&பாக்கவி ஹள்ரத் அவர்கள் 6 ம் தேதி அன்று வஃபாத் ஆனார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் அவர்களின் மண்ணறையை ஜன்னத்துல்  ஃபிர்தவ்ஸ் ஆக ஆக்குவானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கு  ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.ஆமீன் யாஅர்ஹமற் றாஹிமீன்.வஸ்ஸலாம். வெளியீடு :- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

தமிழகத்தில் முதன்முதலாக அரபு மொழியில் Ph.D பட்டம் பெற்ற ஆலிம் !!!

Image
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை  சேர்ந்தவரும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அரபிக் பேராசிரியரும், நெய்னா மூப்பன் பள்ளிவாசலின் இமாமும், மார்க்க அறிஞருமான மௌலான மௌலவி K.F . ஜலீல் அகமது உஸ்மானி ஹழ்ரத் அவர்கள் தமிழகத்திலேயே இமாம் ஒருவர் முதன்முதலாக அரபு மொழியில் Ph.D பட்டம் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பெற்றமைக்கு அவர்களுக்கு மனமுவந்த பாராட்டுக்களையும் அவர்களது கல்விப்பணி மற்றும் மார்க்கப்பணி சிறக்க துஆச் செய்கிறோம்...!

கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா தைக்காவின் அறங்காவலர் அல்லாமா டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் ஹழ்ரத் கிப்லா அவர்கள் !!!

Image
*இன்று உலகில் உயிா் வாழும் மாா்க்க மேதைகளில் தலைசிறந்தவா் நமது டாக்டா் ஷெய்கு நாயகம் அதிசங்கைக்குாிய அல்லாமா தவத்திரு தைக்கா ஷுஐப் ஆலிம் நாயகம் அவா்கள்.* _தென்னகத்திலும் சரந்தீப் நாட்டிலும் தீனுல் இஸ்லாம் செழித்துப் பரவுவதற்குக் காரணமான ஞானவான்களின் பாரம் பாியத்தில் மெஞ்ஞான ஜோதி தவத்திரு தைக்கா அஹமது அப்துல் காதிா் ஆண்டகை (பொிய ஷெய்கு நாயகம் ) அவா்களின் அருமந்த மகனாராகப் பிறந்தவா் நம் டாக்டா் ஷெய்கு நாயகம் அவா்கள்._ தாய் மொழியாகிய தமிழ், வணிக மொழியாகிய ஆங்கிலம், மாா்க்க மொழியாகிய அரபி ஆகிய மும் மொழிகளிலும் தோ்ச்சிபெற்றிருப்பதுடன், இம் மொழிகளில் பேசவும் எழுதவும் திறமை பெற்று டாக்டா் ஷெய்கு நாயகம் விளங்குகிறாா்கள். இத்துடன் உா்து,மலயாளம், சிங்களம்,கண்டனீஸ் (சீனம்) இன்னும் பல மொழி அறிவும் பெற்றிருக்கிறாா்கள். மாா்க்க ஞானம் இந்தக்குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக இருந்தாலும், ஞானத்தில் சுடாிடும் மேதையாக, பிறசமய தத்துவங்களை எல்லாம் இஸ்லாமிய சமயத்துடன் ஒப்பிட்டு அறியும் ஆசானாகவும் விளங்குகிறாா்கள். என்நாடும் போற்றும் தென்நாட்டுத் தென்றல்,கீழக்கரையின் ஜோதி மகான் மாப்பிள்ளை ஆலிம் நா...

புர்தா ஷரீபும் நம் அஃலா ஹலரத்தும் !!!

Image
1919 ம் ஆண்டில் தமிழகத்தில் காலரா போன்றதொரு மிகப்பெரிய நோய் பரவி இருந்தது .. பாக்கியாத் மதரஸாவின் மிகச்சிறந்த உஸ்தாதாக இருந்த முஹத்திஸ் அப்துர் ரஹீம் ஹழரத் அவர்கள் இந்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு நினைவிழந்து பேசக்கூட முடியாத நிலையில் ஏறக்குறைய மரணப்படுக்கையில் இருந்தார்கள் ... " அப்துர்ரஹீம் ஹழரத் " அவர்கள் நமது அண்ணல் அஃலா ஹலரத் அவர்களது மகளை மணமுடித்தவர்கள் மிகச்சிறந்த முதர்ரிஸ் . ( பின்னால் பாகியாத்தின் முதல்வராக இருந்தவர்கள் . ) நமது அஃலா ஹலரத் அவர்கள் தன் மருமகனுக்கு அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள் .. காலரா நோயிலிருந்து மீளாமல் பலர் மரணித்துக்கொண்டிருந்த நேரம் அது .. ஏனெனில் அந்நோய்க்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நேரம் அது .. அப்போது பெரிய பாடம் ஓதும் மாணவர்களில் சிலர் அஃலா ஹலரத் அவர்களிடம் வந்து "ஹழரத்....... புர்தா ஷரீப் ஓதலாமா".... ? என்று கேட்டார்கள் . ஹழரத் அவர்களும் அதற்கிசைந்து " ஒழுச்செய்து , கிப்லாவை முன்னோக்கி , காலை மடக்கி அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் உட்கார்ந்து ஒதுங்கள் .அதில் இரண்டு மீம் வருகிற பைத...

என்மனங்கொண்டான் காதர் ஆண்டகை தர்ஹா !!!

Image
இராமநாதபுரம் மாவட்டம்,உச்சிப்புளி, என்மனங்கொண்டானில் அமைந்திருக்கும் காதர் ஆண்டகை தர்ஹா( நாகூர் தர்ஹா)               இராமநாதபுரம் மாவட்டம்,உச்சிப்புளி  என்மனங்கொண்டானில் 27-02-2018 அன்று   கந்தூரி விழா நடைபெற்றது.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு