சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!
பெரிய ஆலிம் 49 வது நினைவு தினம் - வீடியோ மு தஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா !!! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) '' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற, சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-09-2016 வியாழக்கிழமை காலை 10-30 மணியளவில், சித்தார்கோட்டை,சின்னப் பள்ளிவாசலில்,மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். ஆரம்பமாக பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டது, பின்பு மௌலிது ஷரீஃபும், மலை பைத்துகளும்,ஓதப்பட்டு, உலக மக்களின் நலனுக்காகவும்,ஊர் மக்களுக்காகவும் சிறப்பு துஆச்செய்யப்பட்டது. .'' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ் பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆ...