Posts

Showing posts from February, 2018

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் மண்டபம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆலிம்கள் & ஜமாஅத் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் !!!

Image
சமுதாயத்தின் முதுகெழும்பான ஆலிம்களும் ஜமாஅத் நிர்வாகிகளும் இணைந்து தத்தமது குறைநிறைகளை எடுத்துரைத்து சீர்செய்து கொள்வதற்காக கலந்தாய்வுக் கூட்டம் வருடத்திற்கு ஒருமுறை  நடத்துவது வழக்கம். அதன்படி 27.02.2018 செவ்வாய்க் கிழமை காலை மணி 10:30 க்கு மண்டபம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி அஹமது அமீன் ஆலிம் தலைமையில் மண்டபம் வட்டார ஆலிம்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் (உலமா & உமாரக்கள்) கலந்தாய்வுக் கூட்டம் வேதாளை தெற்குத் தெரு முஹைதீன் பள்ளிவாசலில் நடைபெற்றது. வேதாளை ஜமாஅத் நிர்வாகிகளான ஜனாப் செய்யது அப்துல் ரகுமான், ஜனாப் முஜிபு ரகுமான், ஜனாப் சேக் அப்துல் காதர், ஜனாப் அப்பாஸ் அலி, ஜனாப் காசிம் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகிக்க பள்ளியின் இமாம் மவ்லவி நிஸ்தார் கான் ஆலிம் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். மவ்லவி ஜலால் இப்ராஹீம் ஆலிம் வரவேற்புரை ஆற்ற மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் துவக்க உரை ஆற்றினார்கள். இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி அஹமது இப்ராஹீம் ஆலிம், செயலாளர் மவ்லவி முஹம்மது ஜலாலுத்தீன் ஆலிம், பொருளாலர் மவ்லவி முஹம்மது சாஹிப் ஆலிம் ,...

சித்தார் கோட்டையில் நடைபெற்ற அல் குத்புல் மஜீத் நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் மௌலிது மஜ்லிஸ் !!!

Image
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்  27:02:2018 செவ்வாய்க்கிழமை அன்று  சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலில்  மஃரிப் தொழுகைக்கு பின் அல் குத்புல் மஜீத்  நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா  நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மெளலித் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம்  பெற்ற ஏராளமான நல்லடியார்கள் கலந்து கொண்டு  அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

சித்தார் கோட்டையில் நடைபெற்ற மாபெரும் திக்ரு மற்றும் சிறப்பு துஆ மஜ்லிஸ் !!!

Image
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் 19:02:2018  திங்ககிழமை அன்று சித்தார் கோட்டை ஜும்ஆப்  பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்கு பின் சங்கையான  ஸலவாத்துன் நாரிய்யா மஜ்லிஸ் மற்றும் ஊரின் முசீபத்துகள்  நீங்கவும் வரட்சிகள் நீங்கவும் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் வீரசோழன் ஜாமிஆ  கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வரும்,  ஷாதுலியா தரீக்காவின் கலிஃபாவுமான எங்களது  ஆசிரியர் பெருந்தகை மௌலானா மௌலவி  ஆஷிக்குர் ரஸூல் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத்  கிப்லா அவர்கள் வருகை தந்து சிறப்பு துஆச் செய்தார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம் பெற்ற ஏராளமான  நல்லடியார்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின்  அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

சித்தார் கோட்டையில் நடைபெற்ற மழைத் தொழுகை !!!

Image
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்  16:02:2018 வெள்ளிக்கிழமை அன்று சித்தார் கோட்டை  முஹமதிய்யா பள்ளிகளின் விளையாட்டு திடலில், ஜும்ஆ தொழுகைக்கு முன்னால், தண்ணீர் பஞ்சம்  நீங்கி வரட்சிகள் நீங்கவும் மற்றும் ஊரின் முசீபத்துகள்  நீங்கவும் சிறப்பு மழைத் தொழுகை நடைபெற்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோரின் அனைத்து  பாவங்களை மன்னித்து ஊரில் நடைபெறும் நல்லமல்கள்  மற்றும் நல்லோர்கள்,முதியோர்கள் இன்னும் பாவமறியாத  குழந்தைகளின் பொருட்டால் பஞ்சத்தை நீக்கி  அருள் மழையை தருவானாக ஆமீன்.  இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம் பெற்ற  ஏராளமான நல்லடியார்கள் கலந்து கொண்டு  அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

வெள்ளிக்கிழமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !!!

Image
வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் வாராந்திர பெருநாள் ஆகும். நம்முடைய ஒவ்வொரு பெருநாளும் விசேச கவனத்திற்குரியவை. அதிகப்படியான இபாதத்துக்கள் அதிகப்படியான மனிதாபிமானக் கடமைகளை வலியுறுத்துபவை (உதாரணங்கள்) வெள்ளிக்கிழமையையும் நாம் அந்த வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அவசர கதியிலான ஒரு கூட்டுத்தொழுகையாக மட்டுமே வெள்ளிக்கிழமையை நாம் இதுவரை பயன்படுத்திக் கொண்டிருப்போம் எனில் அந்த நிலை மாற வேண்டும். வார நாட்களில் சனிக்கிழமை யூதர்களுக்கும் ஞாயிற்றுக் கிழமை கிருத்துவர்களுக்கும் பெருநாளாக இருந்தாலும் கூட வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பினரிடமும் பரக்கத்தான ஒரு நாளாக பல்வேறு காரியங்களுக்கும் பயன்படுத்தப் படுகிறது என்பது எதார்த்தமாகும். மற்ற சமூகத்தவர்கள் வெள்ளிக்கிழமையை தவற விட்டு விட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். عَنْ حُذَيْفَةَ ، قَال : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:أَضَلَّ اللَّهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا ، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الأَحَدِ ، فَجَاءَ اللَّهُ بِنَا ، فَهَدَانَا اللَّهُ لِيَوْمِ الْجُمُعَةِ ، فَجَعَلَ الْ...

முகவை தீன்சுடர் தீன் இசைப்பேரரசு அல்ஹாஜ் எஸ்.ஏ.சீனி முகம்மது

Image
இந்தியாவில் தமிழ்நாட்டின் முகவை என்ற இராமநாதபுரத்தில் பிறந்த இஸ்லாமியப்பாடகர்கள் ,இஸ்லாமிய இசைமுரசு ஹாஜி மர்ஹூம் இ.எம். நாஹூர்ஹனிபா,மர்ஹும் எஸ்.எஸ்.ஏ.அப்துல் வாஹித் அவர்களின் காலத்திலேயே தனக்கென தனி இடத்தையும் அவர்களின் அன்பையும் பாராட்டுதலையும் பெற்றதோடுமட்டும் அல்லாமல் காயல் மர்ஹூம் சேக்முகம்மது அவர்களுக்கு இல்லத்திருமணகச்சேரிகளை நடத்தியதுடன் , பாடகர்கள் சேக்முகம்மது மற்றும் அப்துல்வாஹித் அவர்களுடன் இணைந்து பல நூறுமேடைகளில் தன்னுடைய பாடல்களை அரங்கேற்றிய பெருமை தீனிசைப்பேரரசு முகவை ஹாஜி எஸ்.ஏ.சீனிமுஹம்மது அவர்களையே சாறும்.  "இந்தியா எங்கள் தாய்நாடு" என்ற பாடலின் மூலம் உலக மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்து " அன்றைய "மருதநாயகம்" முதல் இன்றைய" ஜனநாயகம் தானா" வரை எத்தனையோ புரட்சிப்பாடல்களை ஆயிரக்கணக்கான பாடல்களை வீரமுழக்கமிட்டு அவர்களின் பாடல்கள் இசைத்தட்டின் வழியே நாட்டிலும் காட்டிலும் மேட்டிலும் , பட்டித்தொட்டிகளிலும் நாளெல்லாம் இசைத்துநிற்கக்காணலாம். மலேசியாவின் பல திருமணநிகழ்வுகளில் கச்சேரிகள் மூலம் தன்னுடைய பாடல்களை அரங்கேற்றியது...

இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே..

Image
 இதை வரலாறு அறிந்தவர்கள் ,இந்த வரலாற்று உண்மையை மறுக்கமுடியாது! இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே.. ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். வரலாற்றை அறிவோம்… . முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. . இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. . இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். . இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டின...

இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்வுரிமை மாநாடு !!!

Image
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே 03-02-2018 அன்று இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்வுரிமை மாநாடு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஹாஜி A. வருசை முஹம்மது தலைமை ஏற்று நடத்த மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் ஆலிம் பெருமக்கள், சமுதாய புரவலர்கள் முன்னிலை வகிக்க மாவட்ட உலமாக்கள் அணி அமைப்பாளர் மவ்லவி யூனுஸ் ஆலிம் அருள்மறை ஓத மாவட்ட செயலாளர் M.S.A.L. முஹம்மது பைசல் வரவேற்புரை ஆற்ற இளைஞர் அணி, மாணவர் அணியினரின் வீரியமிக்க உரைகள்; கூட்டத்தை சுறுசுறுப்பாக்கியது. மஃரிப் தொழுகை இடைவெளிக்குப் பின் அடுத்த அமர்வு ஆரம்பமானது. மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முஹம்மது அவர்களின் துவக்க உரையும் மாவட்ட காஜி ஸலாஹ{த்தீன் ஆலிம், கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹ{சைன் , சீனா தானா காக்கா ஆகியோரின் பேச்சுக்கள் சிந்திக்க வைத்தன. இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் லீக் கடந்து வந்த பாதைகள் , சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பெற்ற வாக்குகளின் புள்ளி விபரங்கள் , ஆதம் நபி முதல் மறைந்து வாழும் இறைநேசர்களின் தியாகங...

தமிழகம் தழுவிய மாபெரும் ஜியாரத் எழுச்சி பேரணி !!!

Image
ஜனவரி 31ஆம் தேதி ஜியாரத் எழுச்சி நாளை முன்னிட்டு சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  ஜியாரத் எழுச்சி பேரணியை மிகச்சிறப்பாக நடத்தியது.அல்ஹம்துலில்லாஹ்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு